“கடவுளின் உதவியால் வெற்றி உறுதி”: நெதன்யாகு

0
22
Article Top Ad

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவைக் குறித்து லெபனான் எல்லையில் இருக்கும் இஸ்ரேல் இராணுவ முகாம்களை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பார்வையிட்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

“வடக்கு எல்லையில் இருக்கும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்களை சந்தித்தேன். அங்கிருந்து சில மீட்டர்கள் தொலைவில் எல்லைக் கோட்டுக்கு அப்பால், அவர்களின் நண்பர்கள், ஹிஸ்புல்லா அமைப்பினர் எங்களுடைய முகாம்களை தாக்குவதற்காக தயார் செய்த உள்கட்டமைப்புகளை தகர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது நான் அவர்களிடம் சொன்னேன்: நீங்கள் தான் வெற்றி நாயகர்கள். நீங்களும் உங்கள் நண்பர்களான இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்களும், காசாவில் உள்ள வீரர்களும் அற்புதங்களை உருவாக்குகிறீர்கள். நீங்கள் சிங்கங்களைப் போன்றவர்கள்.

ஓராண்டுக்கு முன்பு நாம் மிகப்பெரிய தாக்குதலுக்கு உள்ளானோம். கடந்த 12 மாதங்களில் நாம் யதார்த்தத்தை முழுமையாக மாற்றியிருக்கிறோம். நமது எதிரிகளின் மீது நீங்கள் கட்டவிழ்க்கும் தாக்குதலைக் கண்டு ஒட்டுமொத்த உலகமும் சிரிக்கிறது.

உங்களுக்கு என்னுடைய வீரவணக்கம்.வெற்றியின் தலைமுறையினர் நீங்கள் என்பதை நான் உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன். ஒன்றிணைந்து போராடுவோம். கடவுளின் உதவியால் வெற்றி நமக்கே”

பலஸ்தீனத்தின் காசாவை ஆட்சி செய்த ஹமாஸ் இயக்கத்தினர், கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் பகுதியில் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

அதற்கு பதிலடி வழங்கும் விதமாக, காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் இடையே ஓராண்டாக போர் நீடித்து வரும் நிலையில் மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த குழுக்களும், ஹமாஸ் இயக்கத்தினருக்கு ஆதரவாக இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு எதிராக இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.