ஈரான் மீது இஸ்ரேல் சைபர் தாக்குதல்: முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்

0
21
Article Top Ad

ஈரானின் நாடாளுமன்றம் உள்ளிட்ட அரச துறைகள் மீது இஸ்ரேல் பாரிய சைபர் தாக்குதல் திருடு போன முக்கிய ஆவணங்கள் ஈரான் அணுசக்தி நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் இஸ்ரேல் சைபர் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

இதன்காரணமாக ஈரான் அரசின் செயற்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் நாடாளுமன்றம், சட்டப்பேரவை, நீதித்துறை நிர்வாகங்களையும், அணுசக்தி, எரிசக்தி மற்றும் மின் விநியோக கட்டமைப்புகளையும் இலக்குவைத்து இஸ்ரேல் நடத்திய சைபர் தாக்குதலால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஈரான் முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் முடயங்கியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் அனைத்து அரச துறைகள் மீதும் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல்களால் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக ஈரான் சைபர் கவுன்சில் முன்னாள் செயலாளர் பெரோஸ்பாடி தெரிவித்துள்ளார்.