இரண்டாவது போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி!

0
34
Article Top Ad

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டியில் இலங்கை அணி 73 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க அதிகபட்சமாக 54 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதன்படி, 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 89 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டு தோல்வியை தழுவியது.

பந்து வீச்சில் துனித் வெல்லாலகே மூன்று விக்கெட்டுக்களையும், மஹீஷ் தீக்ஷன, சரித் ஹசலங்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதற்கமைய, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை மற்றும் மே.தீவுகள் அணிகள் தலா ஒரு வெற்றிகளை பெற்று 1 – 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.