இலங்கைப் பெருங்கடலை மாசுபடுத்திய 26 கப்பல்கள் –  ஆய்வில் வெளியான தகவல்

0
4
Article Top Ad

இலங்கைப் பெருங்கடலை கடந்த ஒரு வருடத்தில் 26 கப்பல்கள் மாசுபடுத்தியுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் அரசுடன் இணைந்து செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் தொடங்கப்பட்ட கண்காணிப்பு திட்டத்தின் தரவுகளின் அடிப்படையில் இந்த விடயங்களை அதிகாரசபை கண்டறிந்துள்ளது.

இலங்கைப் பெருங்கடலுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது எக்ஸ்பிரஸ் பேர்ல் மற்றும் நியூ டயமண்ட் ஆகிய கப்பல் விபத்துக்களும் கடல் மாசுபடுவதற்கு பிரதான காரணங்களாகும்.

நியூ டயமண்ட் கப்பல் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து 38 கடல் மைல் தொலைவில்  தீ விபத்துக்குள்ளாகி மூழ்கியது.

அதேபோன்று  2021ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் தீப்பிடித்து மூழ்கியது.

இந்த கப்பல் விபத்துக்கள் காரணமாக இலங்கையின் கடல் சுற்றுச்சூழலுக்கு கடுமையான மற்றும் நீண்டகால சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

கடல் சூழல் மாசுபாடு விபத்துக்கள் தொடர்பில் பிரான்ஸ் அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை கடற்பரப்பில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எரிபொருள் கசிவுகளை ஆராய கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பிரான்ஸ் நிறுவனத்தினால் மேற்படி ஆய்வு நடத்தப்பட்டது.

அங்கு பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கடந்த ஓராண்டில் இலங்கைப் பெருங்கடலுக்குள் நுழைந்த 26 கப்பல்கள் கடலை மாசுபடுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here