உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை – கம்மன்பில வௌிப்படுத்திது என்ன?

0
9
Article Top Ad

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதான குற்றவாளிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கைகளை வெளியிடுவதற்காக கொழும்பில் இன்று (21) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழு அறிக்கைகளை வெளியிடுவதற்காக ஜனாதிபதிக்கு இன்று காலை 10.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக கம்மன்பில முன்னதாக தெரிவித்திருந்தார்.

இதன்படி இரண்டு அறிக்கைகளில் ஒன்றை இன்றும் மற்றைய அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமையும் வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளதாக உதய கம்மன்பில மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவ்வாறு செய்தமைக்காக ஜனாதிபதி உடனடியாக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் இதுவரை பகிரங்கப்படுத்தப்படாத நிலையில் அவைகளை பகிரங்கப்படுத்துவதற்கு ஜனாதிபதி வேண்டுமென்றே தயங்குகின்றமை தொடர்பில் நான் பேசுகின்றேன்.

முதல் அறிக்கை, ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். ஐ. இமாம் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை 2024 ஜூன் 25 அன்று அப்போதைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸ் அல்லது புலனாய்வுப் பிரிவினரால் ஏதேனும் விடுபட்டதா அல்லது தவறிழைக்கப்பட்டதா என ஆராய்வதே இரண்டாவது அறிக்கையின் நோக்கமாகும்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம்.ஜே. டி அல்விஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கை, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி, அதாவது தற்போதைய ஜனாதிபதி நியமிக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இந்த அறிக்கைகளை ஏன் மறைக்கின்றது?அது இந்த அறிக்கையில் உள்ளது.

இந்த அறிக்கையின் 43வது பக்கத்தில், அரச புலனாய்வுப் பணிப்பாளரால் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி, மொஹமட் சஹாரான் உள்ளிட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள், கத்தோலிக்க தேவாலயங்கள், பிரபல உணவகங்கள் உட்பட பல இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவுள்ளதாக, வௌிநாட்டு புலனாய்வு பிரிவுகள் அறிவுறுத்தியுள்ளதாக குற்றப்புலானய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் ரவி சேனவிரத்னவே ஆவார்.

இந்த கடிதத்தில் தாக்குதலை நடத்தவுள்ள பயங்கரவாதிகளின் பெயர்கள், தேசிய அடையாள அட்டை எண்கள், தொலைபேசி எண்கள், முகவரிகள், பொதுவாக செல்லும் இடங்கள், பழகுபவர்கள், சிலர் இரவோடு இரவாக செல்வது, அவர்கள் வந்து செல்லும் நேரங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் ரவி சேனவிரத்ன மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதால், அவரைக் கைது செய்ய பொலிஸார் முயற்சிப்பதாகவும், அவ்வாறு செய்யக்கூடாது எனவும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கான 241/2024ஐ ஆய்வு செய்துள்ளேன் நான் ஆராய்ந்துள்ளேன்.

ஏப்ரல் 09 ஆம் திகதி இந்தக் கடிதம் வந்தபோது ரவி செனவிரத்ன வெளிநாடு சென்றிருந்தார். ரவி செனவிரத்ன பின்னர் 16ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு வந்த போது அந்தக் கடிதத்தைப் பார்த்ததாகக் கூறுகிறார்.

அரசு அதிகாரிகள் வெளிநாடு செல்லும்போது, ​​தங்கள் பணிக்கு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும்.

அதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாகஹமுல்ல இந்தப் பணியை உள்ளடக்கியதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அப்படியானால், நாகஹமுல்லவின் கைகளுக்கு ஒருவாரம் எட்டாமல் இந்தக் கடிதம் ரவி செனவிரத்னவின் மேசையில் எப்படி இருந்தது என்ற கேள்வி எழுகிறது.

இந்த கேள்வியை அப்படியே சிரஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணிக்குழாமிடம் விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இரகசியமான கடிதங்களைத் திறக்க வேண்டாம் என்றும், அவற்றை யாருக்கும் அனுப்ப வேண்டாம் என்றும், அவற்றை உடைக்கும் வரை அவற்றை மேசையில் வைக்குமாறு ரவி செனவிரத்ன அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பதில் வழங்கப்பட்டுள்ளது.

உள்வரும் கடிதங்களைப் பார்க்க உரிமை இல்லை என்றால், பணியைக்காக நியமிக்கப்பட்ட அதிகாரி தனது கடமையைச் செய்ய முடியாது.

ரகசியமாக கருதப்படும் கடிதங்களுக்கு உடனடி நடவடிக்கை தேவை.

எனவே ரவி செனவிரத்னவின் சட்ட விரோதமான ஆலோசனையால் இந்தக் கடிதம் மேசையில் உள்ளது.

அதாவது சஹாரான் குழுவினர், அப்பகுதியில் வெடிகுண்டுகளை தயாரிக்கும் போதும், இந்த தாக்குதலை நாங்கள் செய்கிறோம் என காணொளி பதிவு செய்யும் போதும், கொழும்புக்கு குண்டுகளை கொண்டுசென்ற அனைத்து தகவல்களும் ரவி செனவிரத்னவின் மேசையில் இருந்த கடிதத்தில் இருந்துள்ளது.

ரவி செனவிரத்ன இந்தக் கடிதத்தை 16ஆம் திகதி பார்வையிட்டு, மே 01ஆம் திகதிக்குள் விசாரணை நடத்தி முன்னேற்றம் குறித்து தெரிவிக்குமாறு பதிவொன்று உள்ளது.

ஆனால் அது 19ஆம் திகதி சிஐடிக்கு பொறுப்பான நாகஹமுல்லவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் மர்மமான முறையில் ஏப்ரல் 21-ம் திகதி வெடிகுண்டுகள் வெடிக்கும் வரை இந்தக் கடிதம் டிஐஜி நாகஹமுல்லாவுக்குச் சென்றடையவில்லை.

அதாவது ஏப்ரல் 22ஆம் திகதி வெடிகுண்டு வெடித்த மறுநாளே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கடிதம் ரவி செனவிரத்னவின் பொறுப்பில் 12 நாட்களாக இருந்துள்ளது.

19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 20 ஆம் திகதி சனிக்கிழமை விடுமுறை மற்றும் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு.

எனவே, பெரும்பாலும், இந்த கடிதம் குண்டு வெடிக்கும் வரை ரவி சேனவிரத்னவின் மேசையில் இருந்து, வெடிகுண்டு வெடித்த பிறகு அத்தகைய கடிதத்தை அனுப்பியதாக புலனாய்வு பிரிவு கூறும்போது, ​​​​22 ஆம் திகதி காலையில் வந்து இதனை பார்த்து 16ஆம் திகதி என குறிப்பெழுதி 19ஆம் திகதி வௌ்ளிக்கிழமை அனுப்பியதாக கூறும் போது யாருக்கும் நியாயமான சந்தேகம் எழலாம்.

இந்த கடிதத்தை உண்மையில் படித்தால் ரவி செனவிரத்ன அவர்களுக்கு சஹாரான் யார் என்பது நினைவுக்கு வரும்.

ஏனெனில், பயங்கரவாத விசாரணைப் பிரிவு 2014ஆம் ஆண்டு முதல், சஹாரானின் குழுவான தௌஹித் ஜமாத் மற்றும் அவரைப் பற்றி தேடி அவர்கள் தொடர்பான அறிக்கைகளை ரவி செனவிரத்தனவிற்கே கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும், சஹாரான் தொடர்பான 13 புலனாய்வு அறிக்கைகள் 2019 ஜனவரி 1 முதல் ஏப்ரல் 20 வரை மிகக் குறுகிய காலத்தில் ரவி செனவிரத்னவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின்படி, 2017 காத்தான்குடி மத மோதல், 2018 இல் வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்களின் கொலை, 2018 இல் மாவனெல்ல புத்தர் சிலைகள் உடைப்பு, 2019 இல் வனாத்தவில்லுவில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட அனைத்து விசாரணைகளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.இது ரவி செனவிரத்னவின் மேற்பார்வையில் உள்ளது.

எனவே வெடிபொருட்களை சேகரித்து வெடிகுண்டுகளை சோதனை செய்த சஹாரான் கும்பல் தற்கொலை தாக்குதலுக்கு செல்கிறோம் என்று கூறிய போது மற்றவர்களுக்கு இது புரியவில்லை என்றாலும் இதனை நன்றாக புரிந்து கொண்ட ரவி செனவிரத்ன உடனடியாக செயற்பட்டிருக்கலாம்.

ரவி செனவிரத்ன இந்தக் கடிதத்தை உண்மையாகப் படித்திருந்தால், தேடுதல் நடிவடிக்கையை முன்னெடுத்து அவர்களை கைது செய்திருக்க முடியும்.

குறைந்தது ஏப்ரல் 18ம் திகதியாவது தேடுதல் நடத்தியிருந்தால் சஹாரானை கைது செய்திருக்க முடியும்.

ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி தாக்குதலுக்காக கொழும்பு வருவதற்கு முன்னர் குருநாகலில் உள்ள தனது மனைவியின் வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டுவிட்டு வந்துள்ளான்.

தமது மேசையில் ஒருவாரம் கிடந்த அதி இரகசியம் என குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்தை பிரதி பொலிஸ் மா அதிபருக்கு சாதாரணமாக அனுப்புவதை விட பிரதி பொலிஸ்மா அதிபரை உடனடியாக அழைத்து இது மிகவும் முக்கியமான விடயம், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்திருக்கலாம்.

ஆனால் இதை ஒருவாரம் மேசையில் வைத்து, இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க மே 1ம் திகதி வரை காலவகாசம் வழஙகப்படுகிறது. இது எதைக் காட்டுகிறது?

ரவி செனவிரத்ன இந்தக் கடிதத்தைப் படிக்காமல், அதன் தீவிரம் புரியாமல் பதிவிட்டுள்ளார்.

இந்த அறிக்கையின் 41வது பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. ரவி செனவிரத்ன மீது குற்றவியல் அலட்சியத்திற்காக வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

அப்படியானால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரே ரவி செனவிரத்ன.

அவரது மேற்பார்வையில், தாக்குதல் தொடர்பாக புதிதாக விசாரணை நடத்தப்பட்டால், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா? காவல்துறையில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்குமா? இது திருடனின் தாயிடம் கேட்பதை விட திருடனையே கேட்பது போல் உள்ளது.

இந்த அறிக்கை எமக்கு கிடைக்க முன்னர் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி சேனவிரத்ன நியமிக்கப்பட்ட போது இதில் உள்ள தவறை சுட்டிக்காட்டினோம்.

அத்துடன், அல்விஸ் அறிக்கையின் பக்கம் 14 இல், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் தமது கடமைகளை சரியாகச் செய்யாதமைக்காக குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிக்கையில் 17 அதிகாரிகளின் பெயர்கள் உள்ளன, அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும்.

இந்த அறிக்கையை ஏன் ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் நசுக்க முயற்சித்தார்கள்? காரணம் ஜனாதிபதியின் கையாலாகாத்தனம் காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகளை நாம் இன்று வெளியிடவில்லை என்றால், இவர்களை வழக்கு தாக்கல் செய்யாமல் காப்பாற்ற ஜனாதிபதியால் முடியும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டவர் என்று தெரிந்தும், ரவி செனவிரத்னவை அழைத்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை ஒப்படைத்து அவரது மேற்பார்வையில் உயிர்த்த ஞாயறு தாக்கதல் விசாரணையை நடத்த தீர்மானித்தது ஏன்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை கூட நம்பும் தேசிய மக்கள் சக்தியினர், அக்கட்சியின் தேசிய பட்டியலில் உள்ள மொஹமட் இப்ராஹிமை காப்பாற்றுவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான தகவல்களை திரித்து நாட்டையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றி உள்நோக்கத்திற்காக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதா? என்ற நியாயமான சந்தேகம் எழுவதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here