லக்னோ அணியில் இருந்து கே.எல். ராகுல் விடுவிப்பு

0
15
Article Top Ad

ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் சவுதி அரேபியாவில் நடக்கவுள்ளது. அதற்காக 10 அணிகளின் நிர்வாகங்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்த மெகா ஏலத்திற்கு முன்பு எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறோம் என்பதை எதிர்வரும் அக்டோபர் 31ஆம் திகதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும்.

இந்நிலையில், லக்னோ அணியின் தலைவர் கேஎல் ராகுல் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 சீசன்களாக கேஎல் ராகுல் தலைவராகச் செயல்பட்டு வந்த நிலையில் அவரது ஆட்டம் அணியின் நிர்வாகத்துக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்திய அணியில் இடம் பிடித்த வேகபந்து வீச்சாளர் மயங்க் யாதவ், பூரன், ரவி பிஷ்னோய் ஆகியோரை ரீடெய்ன் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here