சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

0
143
Article Top Ad

வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாளுக்கான தயார்படுத்தல்கள் ஆரம்பமாகியுள்ளன.

இந்தநிலையில், தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள் இன்று சனிக்கிழமை  காலை ஆரம்பிக்கப்பட்டன.

இதன்போது பொதுச் சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டு சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

சிரமதானப் பணிகளில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.