இலங்கையின் மீன்பிடித்துறையின் அபிவிருக்கு இந்தியாவின் உதவி தொடரும் – உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உறுதி

0
12
Article Top Ad

இலங்கையின் மீன்பிடித்துறையை ஊக்கவிக்க இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா  திருகோணமலை மீனவர் தொழிற்சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண மீனவ சமூகத்திற்கு அபிவிருத்தி உதவிப் பொதியை கையளிக்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறினார்.

திருகோணமலை மீனவர் தொழிற்சங்கத்தின் மீனவர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,

“மீனவர்களின் வருமானத்தைப் பெருக்குவதற்கு இந்தியா தொடர்ந்து பங்களிக்கும். கடலில் சிக்கித் தவிக்கும் அல்லது கவிழ்ந்த மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்பதற்கு தேவையான பாதுகாப்பு பொருட்கள் இல்லாது இலங்கை மீனவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதனால் இந்த உதவி அவர்களின் தொழிலை மேலும் பாத்துக்காப்பக்கும்.

மீனவர்களின் சகிப்புத்தன்மை, கடின உழைப்பு பாராட்டத்தக்கது. இந்தியப் பெருங்கடலால் இணைக்கப்பட்ட இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஆழமாக வேரூன்றிய வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை நாம் பாத்துக்காது வருகிறோம்.

அதனால் இலங்கையின் மீன்பிடித் தொழிலின் முக்கியத்துவத்தை இந்தியா புரிந்துகொள்கிறது. இந்திய அரசின் உதவியானது அவர்களின் அன்றாட நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகிய இரண்டையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.” என்றார்.