வெற்றி பெற்றார் டிரம்ப் – அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் புதிய சாதனை

0
17
Article Top Ad

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வாக்குப்பதிவு இலங்கை நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது.

வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் வெற்றிக்கு 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.

இந்நிலையில் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தற்போது 277 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளார்.

கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் டிரம்ப்பின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.அதன்படி அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார்.

கடந்த 2016 தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியான டிரம்ப் அதற்கு அடுத்த 2020 தேர்தலில் தோல்வியை தழுவினார்.

இந்நிலையில் மூன்றாம் முறை மீண்டும் வென்று டிரம்ப் புதிய சாதனை படைத்துள்ளார். இதனால் வெள்ளை மாளிகை மீண்டும் டிரம்ப் வசம் வருவதால் குடியரசு கட்சியினர் கொண்டாட்டங்களில் இறங்கியுள்ளனர்.