புதிய நாடாளுமன்றம் 21ஆம் திகதி கூடுகிறது

0
43
Article Top Ad

புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி காலை 10 மணிக்கு கூடவுள்ளது.

பொதுத் தேர்தல் நேற்று வியாழக்கிழமை நாடு முழுவதும் சுமூகமான மற்றும் அமைதியான முறையில் இடம்பெற்றிருந்த நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கையின் 10ஆவது நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இந்த வர்த்தமானி  அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

“இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியான அநுரகுமார திஸாநாயக்கவாகிய நான், இந்த பிரகடனத்தின் மூலம் நவம்பர் 21ஆம் திகதி, காலை 10 மணிக்கு ஸ்ரீ ஜயவர்தனபுர நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு அழைக்கிறேன்.” என குறித்த வர்த்தமானியில் ஊடாக அழைப்பு விடுத்துள்ளார்.