புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரின் சபாநாயகராக பேராசிரியர் கலாநிதி அசோக ரன்வல தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் ஹரினி அமரசூரிய இந்த பெயரை முன்மொழிய அமைச்சர் விஜித ஹேரத் அதனை வழிமொழிந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினரான ரன்வல, இவ்வருட பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 109,332 விருப்பு வாக்குகளைப் பெற்று கம்பஹா மாவட்டத்தின் விருப்பு வாக்கு பட்டியலில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினராகவும் உள்ள அசோக ரன்வல, உயிர் தலைமுறை பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளராகவும் (Director of Biogeneration Economics Research Institute) கடமையாற்றியுள்ளார்.
பெட்ரோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றிய ரன்வல, தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து வலுவான தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்ததோடு, பியகம தொகுதியை மையப்படுத்தி தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.