இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தமிழ் சினிமா ஏன் இந்திய சினிமா கொண்டாடும் பிரபலமாக உள்ளார்.
எந்த ஒரு நிகழ்ச்சி வந்தாலும் ஒரு அமைதி, அடக்கம் என தான் ஒரு பெரிய பிரபலம் என்பதை மறந்து சாதாரணமாக மக்களோடு மக்களாக பயணிப்பார். இவர் தனது மனைவி சாய்ராவை 29 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
விவாகரத்திற்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் குறித்து நிறைய சர்ச்சையான விஷயங்கள் சமூக வலைதளங்களில் உலா வர தொடங்கியது.
இதையெல்லாம் பார்த்த அவரது மகன் அமீன் தனது இன்ஸ்டாவில், என் தந்தை ஒரு சாதனையாளர், இசை துறையில் அவர் அளித்த பங்களிப்புக்காக மட்டுமில்லை.
பல ஆண்டுகளாக அவர் ஈன்ற மதிப்புகள், மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காகவும் அவர் ஒரு சாதனையாளராகவே பார்க்க பாடுகிறார்.
அவரைப் பற்றி ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதை பார்த்து வருத்தமளிக்கிறது. தயவுசெய்து இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்கவும் என எமோஷ்னலாக பதிவு செய்துள்ளார்.