அடை மழை – வடக்கில் ஒன்றரை இலட்சம் பேர் பாதிப்பு

0
2
Article Top Ad
  1. வடக்கில் ஒன்றரை இலட்சம் பேர் பாதிப்பு  

    வடக்கு மாகாணத்தில் பொழியும் அடை மழை காரணமாக 41 ஆயிரத்து 347  குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 630 குடும்பங்களைச் சேர்ந்த 61 ஆயிரத்து 663 பேர் பாதிப்படைந்துள்ளனர். 80 இடைத்தங்கல் முகாம்களில் 2 ஆயிரத்து 12 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 63 பேர்  தங்கவைக்கப்பட்டுள்ளனர். 151 வீடுகள் பகுதியளவிலும்,  7 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

    கிளிநொச்சி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 812 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 728 பேர் பாதிப்படைந்துள்ளனர். 61 பாடசாலைகளில் 377 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 266 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 300 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 242 பேர் பாதிப்படைந்துள்ளனர். 17 இடைத்தங்கல் முகாம்களில் 394 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 208 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் 3 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

    மன்னார் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 205 குடும்பங்களைச் சேர்ந்த 52 ஆயிரத்து 487 பேர் பாதிப்படைந்துள்ளனர். 43 இடைத்தங்கல் முகாம்களில் ஆயிரத்து 240 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 128 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    இதேவேளை, வவுனியா  மாவட்டத்தில் ஆயிரத்து 400 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 822 பேர் பாதிப்படைந்துள்ளனர். 10 இடைத்தங்கல் முகாம்களில் 126 குடும்பங்களைச் சேர்ந்த 363 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் 4  வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here