இந்திய கடற்படையை விரிவு படுத்துவதற்காக திட்டம் 66 எனும் பெயரில் 66 போர்க் கப்பல்களை கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி 50 கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அதேபோல் திட்டம் 77 எனும் பெயரில் அணுசக்தியினால் இயங்கக்கூடிய நீர்மூழ்கி கப்பலை வாங்கவும் இக் கடற்படை திட்டமிட்டுள்ளது.
இத் திட்டங்களுக்கு அதி நவீன பம்ப்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு பிரான்ஸ் வழங்கவுள்ளது.
இப் பம்ப்ஜெட் உந்துவிசை, நீர்மூழ்கிகள் எழுப்பும் சத்தத்தின் அளவைக் குறைக்கிறது. இதன்மூலம் கப்பலின் அமைதியான மற்றும் எதிராளிகளின் கவனத்தை ஈர்க்காமல் செயல்பட முடியும்.
இத் தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ள நீர்மூழ்கிகள் சப்தமற்றவையாக மாறும். இதனால் எதிரிகளால் இருப்பிடத்தை அறிய முடியாது.
அதுமட்டுமின்றி நீர்மூழ்கிகளுக்கான சூழ்ச்சித் திறனை அதிகரிக்கவும் இத் தொழில்நுட்பம் உதவும். இது இந்தியக் கடற்படையின் நீருக்கடியிலான போர் யுத்திகளை அதிகரிக்க வழிவகுக்கும்.
தொடர்ந்து இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் வலிமையான ஒரு சக்தியாக இந்திய கடற்படை மாறும்.
இத் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த பிரான்ஸ் உதவு முன்வந்திருப்பது இரு நாடுகளுக்கிடையில் பாதுகாப்புத் துறை தொடர்பான உறவின் வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது.
மேலும் வான், கடல், தரை என அனைத்து கூட்டு இராணுவ பயிற்சிகளையும் இரு நாட்டு இராணுவமும் மேற்கொள்கின்றன. மற்றும் இராணவ தளபாடங்களை வடிவமைத்தல், மேம்படுத்தல் போன்றவற்றிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.