இலங்கை மக்களுக்கு ஜனாதிபதியிடமிருந்து கிடைத்த நல்ல செய்தி…!

0
4
Article Top Ad

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு குறைந்த வரியும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரியும் அறிவிடும் முறைமையை சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி எமது அரசாங்கம் உருவாக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்று மீண்டும் ஏற்பட எமது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் தனியார் பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

”2028ஆம் ஆண்டுமுதல் நாம் கடனை மீள செலுத்த வேண்டும் கருத்தொன்றை சமூகத்தில் பரப்பி வருகின்றனர். சில பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். 2028ஆம் ஆண்டாகும் போதும் எமது அரசாங்கம்தான் இருக்கும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

2022, 2023இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியான நிலைமையை மீண்டும் ஒருபோதும் ஏற்பட நாம் அனுமதியளிக்க மாட்டோம். 12.5 பில்லியன் சர்வதேச கடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதில் 11.5 பில்லியன் டொலர் 2015 மற்றும் 2019 இற்கு இடைப்பட்ட காலத்தில் பெறப்பட்ட கடனாகும். ஆலோசனைகள் கூறுபவர்கள் அப்போது அவர்களுக்கு கூறியிருக்க முடியும். 2028 ஆம் ஆண்டளவில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை 15.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

உழைக்கும் போது செலுத்தும் (PAYE) வரி விலக்கு வரம்பை ரூகப 100,000 முதல் 150,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) அரசாங்கம் உடன்படிக்கைக்கு வந்துள்ளது.

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) மூன்றாவது மீளாய்வு தொடர்பாக ஐ.எம்.எப். உடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, வருமான வரி வரம்பை அதிகரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.

புதிய வரி திருத்தங்களின் பிரகாரம் தனிநபர் வருமானமாக ரூ. 500,000 முதல் ஒரு மில்லியனை பெறுபவர் வரியின் முதல் கட்டத்தில் உள்ளடகப்பட்டுவதுடன், அவர் 6 வீத வரி விகிதத்திற்கு உட்படுவார். 150000 ரூபாவுக்கு குறைவான வருமானத்தை பெறுபவர்கள் முழுமையாக வரி விலக்குக்கு உட்படுவர். 2 இலட்சம் ரூபா வருமானம் பெறுபவருக்கு 71 வீதம் விரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது,

ரூ.250,000 வரை வருமானம் பெறுபவருக்கு 61 வீதமும், 300,000 ரூபா வரை வருமானம் பெறுபவருக்கு 47 வீதமும், 350,000 ரூபா வரை வருமானம் பெறுபவருக்கு 25.5 வீதமும் அளிக்கப்பட்டுள்ளது. வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் குறைவான வருமானம் பெறுபவர்களுக்கு அதிகமான வரியும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு குறைவான வரியும் காணப்பட்டது. தற்போது, குறைவான வரி பெறுவோருக்கு குறைவான வரியும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரியும் அறவிடும் முறை உருவாகியுள்ளது.

தடுத்து வைக்கும் வரி 5 வீதத்திலிருந்து 10 வீதமாக அதிகரிக்கப்படும். சேவைகள் ஏற்றுமதிக்கான வரியை 30 வீதத்திலிருந்து 15 வீதமாக குறைக்க சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் தனியார் வாகங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி முதல் போக்குவரத்து மற்றும் விசேட தேவைக்கான வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் தனியார் பயன்பாட்டுக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், ஊடாக மீண்டும் டொலர் நெருக்கடிக்கு நாடு முகங்கொடுக்காது. அதற்கான மாற்று வழிகள் உருவாக்கப்பட்டள்ளது. வாகன சந்தையும் அதை சார்ந்த தொழில்துறையும் மிகவும் பெரியது. நீண்டகாலம் இதனை மூடி வைத்திருக்க முடியாது.

இதுவேளை, அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கபெறாத மற்றும் அதற்கு தகுதியுள்ளவர்கள் தொடர்பில் மீண்டும் மறுபரிசீலமை செய்யப்படும். எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அவர்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்கும் வகையில் விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். வங்கிக் கணக்கை திறக்க முடியாது 67ஆயிரம் குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவை பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டையின்றி வங்கிக் கணக்கை திறப்பதற்கான அனுமதியை வழங்க மத்திய வழங்கியுடன் நடத்திய கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒன்றரை வருட நிலுவை தொகையுடன் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும்.

இதேவேளை, அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கப்பெறும் குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு 6ஆயிரம் ரூபா வவுச்சர் ஒன்றை பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொள்ள வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனவரி முதல் குறித்த வவுச்சர்கள் வழங்கப்படும். அதேபோன்று அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காது குறித்த வவுச்சர்களை பெற்றுக்கொள்ள தகுதியுடைய மாணவர்களுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here