ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு

0
12
Article Top Ad

மாகாணங்களில் குற்றங்களைக் குறைக்க மாகாண அளவில் ஒரு புதிய சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அமைக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒன்று என்ற வகையில் ஒன்பது பொலிஸ் பிரிவுகளும் கொழும்பு குற்றப் பிரிவின் மாதிரியாக வடிவமைக்கப்பட்டு, பாரிய குற்றங்களை விசாரிப்பதற்கும் மாகாண மட்டத்தில் சிறப்பு விசாரணைகளை நடத்துவதற்கும் பணிக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இந்த பொலிஸ் பிரிவுகளை உருவாக்குவது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்தை அடுத்த வாரம் சமர்ப்பிக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒன்பது மாகாண பொலிஸ் பிரிவுகளும் ஒரு மூத்த துணைப் பொது ஆய்வாளர் (DIG) மேற்பார்வையின் கீழ் இருக்கும். இந்தப் பிரிவுகளின் ஒட்டுமொத்தப் பொறுப்பில் பொலிஸ்மா (IGP) இருப்பார்.

இந்தப் பிரிவுகள் முதன்மையாக தீர்க்கப்படாத வழக்குகளைத் தீர்ப்பது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற பாரிய குற்றங்களை எதிர்த்துப் போராடுவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என அமைச்சர் குறிப்பிட்டார்

மனித கடத்தல் போன்ற சில மாகாணங்களில் அதிகமாகக் காணப்படும் சில குற்றங்களையும் இந்த குழுவினர் விசாரிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரிவுக்கும் அதன் சொந்த விசேட இலக்கங்கள் இருக்கும், பொது மக்கள் பெயர் குறிப்பிடாமல் தகவல்களை வழங்க முடியும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

இந்த புதிய பொலிஸ் பிரிவு ஜனவரி முதல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here