62 பேருடன் பயணித்த விமானம் ஒன்று கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது.
பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது.
விமானம் அவசரமாக தரையிறங்கக் கோரியதாக கூறப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.
விமானத்தில் 62 பேர் இருந்ததாக அஜர்பைஜான் விமான நிறுவனங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் பாகுவிலிருந்து ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது, ஆனால் க்ரோஸ்னியில் மூடுபனி காரணமாக திருப்பி விடப்பட்டதாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் குறைந்தது 57 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இதுவரை 30 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், ஏனையவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பலரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.