மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தியுள்ள மேல் மாகாணம்

0
10
Article Top Ad

2023ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மிகப் பெரிய பங்களிப்பு மேல் மாகாணத்திலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

27,630 பில்லியன் ரூபா பங்களிப்பு மேல் மாகாணத்தில் இருந்து பெறப்பட்டதாகவும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தில் 43.7 வீதமாகும் என மத்திய வங்கி கூறியுள்ளது.

2023 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது முந்தைய ஆண்டை விட குறைந்த வேகத்திலேயே வளர்ந்துள்ளது.

2022 ஆம் ஆண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பு மேல் மாகாணத்தில் இருந்தே பெறப்பட்டது. இது 43.9 வீதமாக இருந்தது. என்றாலும், 2023 இல் இந்த வீதம் சிறிதளவு குறைந்துள்ளது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மாகாண மட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவதாக 10.9 சதவீத பங்களிப்பை வடமேல் மாகாணம் வழங்கியுள்ளதுடன், மூன்றாவவதாக 10.3 வீத பங்களிப்பை மத்திய மாகாணம் வழங்கியுள்ளது.

தென் மாகாணம் 9.3, சப்ரகமுவ மாகாணம் 7.0, வட மத்திய மாகாணம்(4.8, ஊவா மாகாணம் 4.7, கிழக்கு மாகாணம் 4.7 மற்றும் வட மாகாணம் 4.5 என்ற அடிப்படையில் மாகாணங்களில் பங்களிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கைத்தொழில் துறையின் பங்களிப்பு 48.7 வீதமும், சேவைத் துறையின் பங்களிப்பு 45.9 வீதமும் கிடைக்கப்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here