முன்னாள் ஹமாஸ் தலைவரைக் கொன்றதை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

0
6
Article Top Ad

இஸ்ரேலின் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், முன்னாள் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை தங்கள் இராணுவம் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

அந்தத் தகவலை டிசம்பர் 23ஆம் திகதி கட்ஸ் வெளியிட்டார். இஸ்மாயில் ஹனியே இவ்வாண்டு ஜூலை மாதம் ஈரானில் கொல்லப்பட்டார்.

கட்ஸின் இந்த திடீர் அறிவிப்பு ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பூசலை மேலும் அதிகமாக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஏற்கெனவே காஸா, லெபனானில் இஸ்ரேலின் நடவடிக்கையைக் கண்டு ஈரான் கடும் அதிருப்தியில் உள்ளது. இந்த தகவல் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

“இஸ்ரேல் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற படைகளை வீழ்த்தியுள்ளது. ஈரான் தொழில்நுட்பத்தை விஞ்சியுள்ளோம், சிரியாவில் அசாத் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம். ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை,” என்று கட்ஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here