2024ஆம் ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 இந்திய திரைப்படங்கள்

0
6
Article Top Ad

ஒரு படத்தின் வெற்றியை அப்படத்தின் வசூல் தான் தீர்மானிக்கிறது. அதுவும் இன்றைய காலகட்டத்தில் ரசிகர்களும் படங்களின் வசூல் விவரங்களை தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

குறிப்பாக முன்னணி நட்சத்திரங்களின் படம் என்றால் சொல்லவே தேவையில்லை. அந்தந்த முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில், வசூலை பற்றி பேச துவங்கிவிடுவார்கள். இப்படி மாறிவிட்டது இன்றைய சினிமாவின் நிலைமை.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் டாப் 10 குறித்து பட்டியல் வெளிவரும். அந்த வகையில் 2024ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த டாப் 10 இந்திய திரைப்படங்கள் குறித்து லிஸ்ட் வெளியாகியுள்ளது.

டாப் 10 லிஸ்ட்

புஷ்பா 2 – ரூ. 1,705 கோடி
கல்கி 2898 ஏடி – ரூ. 1,200 கோடி
ஸ்ட்ரீ 2 – ரூ. 874 கோடி
தேவரா – ரூ. 521 கோடி
கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் – ரூ. 440 கோடி
Bhool Bhulaiyaa 3 – ரூ. 417 கோடி
சிங்கம் அகைன் – ரூ. 389 கோடி
ஹனுமான் – ரூ. 350 கோடி
ஃபைட்டர் – ரூ. 344 கோடி
அமரன் – ரூ. 340 கோடி

இந்த டாப் 10 பட்டியலில் தமிழ் சினிமாவில் இருந்து தளபதி விஜய்யின் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படமும், சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படமும் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here