தென் கொரியாவில் நடந்த கோர விமான விபத்து – அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?

0
11
Article Top Ad

தென் கொரியாவில் நேற்று 179 பேர் உயிரிழந்த விமான விபத்து அந்நாட்டில் பதிவான மோசமான வணிக விமான பேரழிவாகும். இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்து இரண்டு கருப்பு பெட்டிகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இதன்படி, விமான நிலைய ஓடுபாதையில் விமானம் தரையிறங்கி விபத்துக்குள்ளாவதற்கு முந்தைய இறுதி தருணங்கள் குறித்த முக்கியமான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தரையிறங்கும் கியர் செயலிழப்பு மற்றும் பறவை மோதியதில் விபத்து ஏற்பட்டதாக என்பது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.

1. போயிங் 737-800 விமானத்திற்கு என்ன ஆனது?

ஜெஜு ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் 737-800 விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை முவான் சர்வதேச விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது, விமானத்தின் அடிபகுதி ஓடுபாதையில் சறுக்கிச் சென்று சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

பறவைகள் மோதும் அபாயம் குறித்து கட்டுப்பாட்டு பிரிவினர் எச்சரித்த சில நிமிடங்களுக்குப் பிறகு விமானி மேடே அவசர அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானத்தின் இயந்திரத்திற்குள் ஒரு பறவை நுழைந்து செயலிழப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கொரிய அதிகாரிகள் கருதுகின்றனர்.

விபத்தின் காணொளி காட்சிகள் விமானத்தின் தரையிறங்கும் கியர் விரிவடையவில்லை என்பதைக் காட்டியது, இது பறவை மோதலுடன் தொடர்புடையதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

2. பறவை மோதுவது என்றால் என்ன?

பறவைகள் விமானப் போக்குவரத்துக்கு ஆபத்தானவை, ஏனெனில் அவை டர்பைனுக்குள் இழுக்கப்படலாம் அல்லது விமானத்தின் பிற பகுதிகளை சேதப்படுத்தலாம், இதனால் இயந்திரம் செயலிழந்து போகக்கூடும்.

2009ஆம் ஆண்டில், ஒரு ஏர்பஸ் A320 விமானம் நியூயார்க்கில் உள்ள ஹட்சன் ஆற்றில் தரையிறங்கியது, ஒரு பறவை மோதியதால் விமானத்தின் இரண்டு இயந்திரங்களும் சேதமடைந்தன.

இந்த விபத்து ஷ”ஹட்சனில் அதிசயம்” என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிர் சேதம் இன்றி காப்பாற்றப்பட்டனர்.

1990 மற்றும் 2019 க்கு இடையில் அமெரிக்காவில், பறவைகள், மான்கள் மற்றும் குள்ளநரிகள் உள்ளிட்ட சிவில் விமானங்கள் மீது சுமார் 227,000 வனவிலங்கு தாக்குதல்கள் நடந்துள்ளதாக ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அந்தக் காலகட்டத்தில், உலகளவில் வனவிலங்கு தாக்குதல்களால் 292 மனித இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் சிவில் விமானங்கள், இராணுவம் அல்லாத விமானங்கள் மீது பறவை மோதல்களில் சுமார் 61 வீதமானவை தரையிறங்கும் போது நிகழ்ந்ததாக ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விமானங்கள் சிறிது நேரம் ஒரு இயந்திரத்துடன் இயக்க முடியும், மேலும் விமானிகள் எரிபொருளை தீர்ப்பது போன்ற பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம்.

2020 மற்றும் 2024 க்கு இடையில் பதிவான பறவை மோதல்களில் பாதி 500 அடிக்கும் குறைவான ஆழத்தில் நிகழ்ந்ததாக சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய பாதுகாப்புத் தலைவரான ஜெஹாத் ஃபக்கீர் கடந்த மே மாதம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

சமீபத்திய ஆண்டுகளில் பறவை மோதல்கள் அதிகரித்து வருவதாக எச்சரித்த அவர், அவை “குறிப்பிடத்தக்க செயல்பாட்டு ஆபத்தை ஏற்படுத்துகின்றன” என்றும் கூறியுள்ளார்.

3. விசாரணையாளர்கள் எதில் கவனம் செலுத்துகிறார்கள்?

தென் கொரிய அதிகாரிகள் நாட்டில் இயங்கும் 101 போயிங் 737-800 விமானங்களையும் ஆய்வு செய்யவுள்ளனர். இதனால் போயிங் மற்றும் இயந்திர தயாரிப்பாளர்களை இந்த நடவடிக்கையில் இணையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பறவை மோதலின் சாத்தியக்கூறு குறித்து கவனம் செலுத்தும் அதே வேளையில், விமான நிறுவனம் மற்றும் விமான நிலையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள், அத்துடன் விமானத்தின் மின் அமைப்பு விபத்துக்கு முன்பு மூடப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் போன்ற பிற காரணிகளையும் அதிகாரிகள் ஆராய்வார்கள்.

தரையிறங்க வழிகாட்டும் கருவியில் ஏதேனும் தாக்கம் உள்ளதா என்பதையும் அவர்கள் ஆராய்வார்கள். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு கருப்புப் பெட்டிகளை அதிகாரிகள் இன்று மாலை சோதனை செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. உலகளவில் குறைந்த விபத்துகள்

விபத்தில் சிக்கிய போயிங் 737, சமீபத்திய மேக்ஸ் வகையின் முன்னோடியாகும். விமான சேவையில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்ற ஒரு நாட்டில் வழக்கமான பராமரிப்பு சோதனைகளில் தேர்ச்சி பெற்ற நம்பகமான விமானமாக இது கருதப்படுகிறது.

உலகம் முழுவதும், இந்த வகை விமானங்கள் சேவையில் உள்ளன. ஜெஜு ஏர் விபத்து ஒரு வாரத்திற்குள் இரண்டாவது பெரிய விமான பேரழிவாகும். ரஷ்ய வான்வெளியில் டிசம்பர் 25 அன்று அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 68 பேர் வரை உயிரிழந்தனர்.

கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு செயல்பாடுகளில் ஏற்பட்ட மீட்சியின் போது வணிக விமான நிறுவனங்களில் கடந்த ஆண்டு உலகளவில் மரண விபத்துக்கள் குறைந்தன.

2023 ஆம் ஆண்டில், வணிக விமானப் போக்குவரத்து விபத்துக்களில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2022 இல் 160 ஆக இருந்தது என்று சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here