அதானி நிறுவனத்துக்கு அரசாங்கம் புதிய முன்மொழிவு – காற்றாலை மின் திட்டம் மீண்டும் செயல்படுமா?

0
25
Article Top Ad

மன்னார் மற்றும் பூனகரி காற்றாலை மின் திட்டம் இடைநிறுத்தபடவில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

மன்னார் காற்றாலை திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் கடந்தவாரம் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் குறித்த திட்டத்தை மறுசீரமைக்கும் யோசனையையே இலங்கை அரசாங்கம் முன்மொழிந்திருந்தது.

என்றாலும் குறித்த திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியானதை அதானி குழுமமும் நிராகரித்திருந்தது,

இந்த நிலையில், மன்னார் மற்றும் பூனகரி காற்றாலை மின் திட்டத்தின் கீழ் மின்சார கொள்முதல் விலையை ஒரு அலகுக்கு 6 அமெரிக்க சத்துக்கும் கீழே குறைக்க அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

”ஆரம்பத்தில் ஒரு அலகுக்கு 8.25 சத்தம் (டொலர்) என முன்மொழியப்பட்ட இந்த திட்டம் போட்டி ஏலம் இல்லாததால் விமர்சனங்களை எதிர்கொண்டது.

இந்த திட்டம் ரத்து செய்யப்படாது, இந்த ஒப்பந்தம் குறித்த விவாதங்கள் 2022 இல் தொடங்கின.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகள் அவசியமாகும். இதில் சூழல் பாதிப்புகள் இருக்கும். ஆனால் எமது நாட்டுக்கு அதிக பயன்தரும் வகையில் திட்டம் மாற்றியமைக்கப்படும்,

அதன்காரணமாகவே ஒரு அலகு 6 சத்துக்கும் கீழான அமெரிக்கா டொலரை அரசாங்கம் முன்மொழிகிறது” என்றும் அமைச்சர் கூறினார்.