பாகிஸ்தானுக்கான அமெரிக்க நிதியுதவி நிறுத்தம்: ட்ரம்ப் உத்தரவு

0
8
Article Top Ad

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவிகளை தற்காலிகமாக நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் சர்வதேச மேம்பாட்டு திட்டங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்து வந்தது. பாகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள், தொல்லியல் ஆய்வு இடங்கள், அருங்காட்சியங்கள், உள்ளூர் மொழிகள் மற்றும் கைவினைத் தொழில்களை காக்க, கலாச்சார பாதுகாப்பு நிதியை பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் நிதி மூலம் வழங்கி வந்தது.

இந்த நிதியை தற்காலிகமாக நிறுத்தவும், திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை மறு ஆய்வு செய்யவும் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் எரிசக்தி துறை தொடர்பான 5 திட்டங்களுக்கும் அமெரிக்கா நிதியுதவி அளித்து வந்தது. ட்ரம்ப் உத்தரவால், இந்த நிதியுதவியும் நிறுத்தப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கான 4 திட்டங்களும், சமூக பாதுகாப்பு திட்டமும், பாதிப்பை சந்தித்துள்ளன.

இது தவிர வேளாண்,சுகாதாரம், வாழ்வாதரம் மற்றும் உணவு பாதுகாப்பு, பருவநிலை மற்றும் கல்வி திட்டங்களும் பாதிப்படைந்துள்ளன. இத்திட்டங்களில் சில நிரந்தரமாகவும் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

அமெரிக்க நிதியுதவி நிறுத்தத்தால், பாகிஸ்தான் திட்டங்களுக்கு மொத்த பாதிப்பு எவ்வளவு என இன்னும் மதிப்பிடப்படவில்லை. பாகிஸ்தானுக்கு, அமெரிக்க ஆண்டு தோறும் எவ்வளவு நிதியுதவி அளித்து வந்தது என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.

அமெரிக்காவின் வெளிநாட்டு நிதியுதவிகள் மறு ஆய்வு செய்யப்படும் என அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் டாமி ப்ரூஸ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். அதன்படி பாகிஸ்தானுக்கான நிதியுதவி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here