மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

0
31
Article Top Ad

இறைபதமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

காங்கேசந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு இன்று (31) பிற்பகல் சென்று மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அனுதாபங்களை கூறினார்.

போக்குவரத்து, பெருந்தெருக்கல்,துறைமுகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.

மாவை சேனாதிராஜாவின் இறுதி கிரியைகள் நாளைமறுத்தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.