அமெரிக்க பொருள்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பு – உலக வர்த்தக போர் உருவாகுமா?

0
4
Article Top Ad

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று, நாட்டின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றதில் இருந்தே உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவா்களுக்கு பிறப்பின் அடிப்படையில் அளிக்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவது மற்றும் அண்டை நாடான கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு போன்ற அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறாா்.

அத்துடன், சீன இறக்குமதி பொருள்கள் மீதும் கூடுதலாக 10 சதவீத வரி விதித்து அவா் உத்தரவிட்டாா். அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்த வரி விதிப்பை மேற்கொள்வதாக அவா் கூறியுள்ளார்.

சீனா மீது அமெரிக்க அரசு கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், அதற்கு பதிலடியாக சீன அரசும் வர்த்தகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை இன்று(பிப். 4) எடுத்துள்ளது.

அதன்படி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் நிலக்கரி, இயற்கை எரிவாயு பொருள்கள் மீது 15 சதவிகதம் வரியும், கச்சா எண்ணெய், வேளாண் உபகரணங்கள், குறிபிட்ட ரக கார்கள் உள்பட இன்னும் சில பொருள்கள் மீது 10 சதவிகிதமும் கூடுதல் வரி விதிக்க முடிவெடுத்துள்ளதாக சீன அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்கண்ட வரி விதிப்பு நடவடிக்கையை பிப். 10ஆம் திகதி முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா, மெக்ஸிகோ, சீனாவைப் போலவே ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கும் விரைவில் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் அறிவிப்பு மற்றும் சீனா, கனடாவின் நகர்வுகள் உலக வர்த்தக போரொன்றை உருவாக்க கூடிய வாய்ப்புகளை உருவாக்கும் என பொருளாதாரா நிபுணர்களை தெரிவிக்கின்றனர்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here