அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் கணுக்கால் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக அவர், வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்பது மிகவும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அவருக்கு பதிலாக சாம்பியன் டிராபியில் அணியை வழி நடத்தும் பொறுப்பை ஸ்டீவன் ஸ்மித் அல்லது டிராவிஸ் ஹெட்டிம் வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
பேட் கம்மின்ஸுக்கு மேலதிகமாக அணியின் முக்கிய சீமர் ஜோஷ் ஹேசில்வுட்டும் உடற்தகுதி பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் மெக்டொனால்ட் வெளிப்படுத்தினார்.
அனுபவம் வாய்ந்த சகலதுறை வீரர் மிட்ச் மார்ஷ் காயம் காரணமாக ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறியது அணிக்கு ஒரு அடியாக இருந்தது.
இந்த நிலையில், மேற்கண்ட அறிவிப்பால் அவுஸ்திரேலியாவின் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி திட்டங்கள் மேலும் குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எதிர்வரும் பெப்ரவரி 19 அன்று ஆரம்பமாகும் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட அணியில் சேர்க்க அவுஸ்திரேலியா மூன்று புதிய வீரர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.