அரசாங்கம் மீது பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரிப்பு

0
3
Article Top Ad

தேர்தலுக்கு பின்னர் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் மீதான பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு வேகமாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 24 வீதமாக காணப்பட்ட அரசாங்கத்திற்கான பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு தற்போது 62 வீதமாக அதிகரித்துள்ளது.

“நாடு எண்ணும் விதம்” என்ற தொனிப்பொருளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் புதிய பெறுபேறுகளின் அடிப்படையில் இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் 7 வீதமாக காணப்பட்டதாகவும் இவ்வாண்டின் அது 62 வீமதாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்க அதிகரிப்பாக எடுத்துக்கொள்ள முடியும் எனவும் வெரிட்டே ரிசர்ச் சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு முதல் முறையாக, பெரும்பான்மையான மக்கள், அதாவது 55 வீதமானோர் , இலங்கையின் பொருளாதார நிலைமை மேம்பட்டு வருவதாக நம்புவதாக வெரிட் ரிசர்ச் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனினும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் இன்னும் பலவீனமான நிலையில் இருப்பதாக 47 வீத மக்கள் நம்புவதாக வெரிட் ரிசர்ச் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதிப் பகுதியில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பொது தேர்தலின் பின்னர் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு மக்களிடம் எத்தகைய ஆதரவு உள்ளதென இந்தத் தேர்தல் மூலம் அறிய முடியும்.

அரிசி, தேங்காய் உட்பட சில அத்தியாவசிய பொருட்களுக்கு தட்பாடு ஏற்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் தவறு இல்லை என்ற போதிலும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

அத்துடன், வரவு – செலவுத் திட்டத்தையும் அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது. இதில் பல சாதகமான காரணிகளும் உள்ளன. இதற்கு மத்தியில் தான் அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here