இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையினை இரத்து செய்த ஹமாஸ்

0
1
Article Top Ad

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தற்காலிக போர்நிறுத்தம் அமுலில் காணப்படும் நிலையில் இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையினை ஹமாஸ் இரத்து செய்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தற்காலிக போர்நிறுத்தம் அமுலில் காணப்படும் நிலையில் ஒப்பந்தத்தின் பிரகாரம் ஹமாஸ் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவித்து வருகின்றது.

இதற்கு பதிலீடாக இஸ்ரேல் தமது நாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்து வருகின்றது இந்த நிலையில் பணயக்கைதிகளில் கொல்லப்பட்ட 4 இஸ்ரேலியர்களின் உடலை ஹமாஸ் ஒப்படைத்திருந்தது.

கொல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் நால்வரின் உடல்கள் காசாவின் முக்கிய நகரில் வைத்து செஞ்சிலுவை சங்கம் ஊடாக இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் இதன்போது இஸ்ரேலியர்களைன அவமதிக்கும் வகையில் காசாவில் அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது

இந்த நடவடிக்கையானது போர் நிறுத்தத்தினை மீறும் செயலாகும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது அத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை ஹமாஸ் மீறியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளதுடன் பணயக்கைதிகளை விடுதலை செய்யும் தீர்மானத்தினையும் நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்யாத நிலையில் இஸ்ரேல் போர்நிறுத்தத்தினை மீறியுள்ளதாக ஹமாஸ் குற்றம் சுமத்தியுள்ளது. இஸ்ரேலுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதில்லை எனவும் அறிவித்துள்ளது

இதேவேளை போர் நிறுத்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு படையினரை தயார் நிலையில் இருக்குமாறும் இஸ்ரேல் பிரதமர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here