ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிரொபி – இந்தியா அணி வெற்றி

0
32
Article Top Ad

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிரொபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் டுபாயில் நடைபெற்று வருகிறது.

அதன்படி தொடரின் 5ஆவது லீக் போட்டி இன்று டுபாயில் நடைபெற்றது

இந்தப் போட்டியில் இந்தியா(India) மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

அதன்படி இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இன்னிலையில் பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் பாண்டியா 2 விக்கெட்டுகளும் அக்சர், ஜடேஜா, ஹர்ஷித் ராணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர்.

இந்நிலையில், 242 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்கள் முடிவில் 244 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.

அபாரமாக விளையாடிய விராட் கோலி சதம் அடித்திருந்தார்.

இதேவேளை இப்போட்டியில் நிதானமாக விளையாடிய விராட் கோலி 15 ஓட்டங்கள் அடித்தபோது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ஓட்டங்களை அதிவேகமாக கடந்து கோலி சாதனை படைத்தார்.

இவர் சச்சின், சங்ககாராவிற்கு பிறகு இந்த சாதனையை படைத்த 3 ஆவது வீரர் என்ற பெருமையை இன்று கோலி பெற்றுக்கொண்டார்

இதன் மூலம் அரையிறுதி செல்வதை கிட்டத்தட்ட இந்திய அணி உறுதி செய்துள்ளது.

மேலும் இந்த தோல்வியின் மூலம் அரையிறுதி செல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.