செர்பிய நாடாளுமன்றத்தில் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு

0
15
Article Top Ad

செர்பிய நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் புகை குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதைத் தொடர்ந்து மிகப்பெரிய பதற்றமான நிலை ஏற்பட்டது.

இந்தக் குழப்பத்திற்கு மத்தியில், ஒரு சட்டமன்ற உறுப்பினர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் செர்பியாவின் கடுமையான அரசியல் நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது.

அங்கு ஒரு ஜனநாயக அரசாங்கம் பல மாதங்களாக ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் செர்பியாவின் நோவி சாட் நகர ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்ததையடுத்து, நான்கு மாதங்களாக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் பலர், ஜனாதிபதி அலெக்சாண்டர் வூசிக்கின் தசாப்த கால ஆட்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இந்த நிலையில் செவ்வாயன்று சட்டமன்றக் கூட்டத்தொடரில், செர்பிய முற்போக்குக் கட்சி (SNS) தலைமையிலான ஆளும் கூட்டணி நிகழ்ச்சி நிரலுக்கு ஒப்புதல் அளித்த பின்னர், சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கள் இருக்கைகளில் இருந்து நாடாளுமன்ற சபாநாயகரை நோக்கி ஓடிச்சென்று பாதுகாவலர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.

ஏனையவர்கள் புகை மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

1990 இல் பல கட்சி ஜனநாயகம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பல தசாப்தங்களில் நாடாளுமன்றத்துக்குள் கறுப்பு மற்றும் இளஞ்சிவப்பு புகை மூட்டுவதை ஒரு நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here