இந்தியாவிற்கு செயற்கைக்கோள் இணைய சேவைகளைக் கொண்டுவருவதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளன.
இந்தக் கூட்டாண்மை கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்துதல், ஆன்லைன் கல்வி, தொலை மருத்துவம் மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தியா முழுவதும் செயற்கைக்கோள் இணைய சேவையை விரிவுபடுத்துவதை, இந்த ஒப்பந்தங்கள் நோக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த ஒப்பந்தம் பெரும்பாலான ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது, ஏனெனில் மஸ்க் சமீபத்தில் இரு நிறுவனங்களுடனும் பகிரங்கமாக மோதல் போக்கை வெளிப்படுத்தியிருந்தார்.
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஸ்டார்லிங்கிற்கு உலகம் முழுவதும் 4.6 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.
ஸ்பேஸ்எக்ஸ் 2021 முதல் இந்தியாவில் சேவைகளைத் தொடங்க இலக்கு வைத்துள்ளது, ஆனால் ஒழுங்குமுறை தடைகள் அதன் வருகையை தாமதப்படுத்தியுள்ளன. இந்நிலையில், தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.
எலோன் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸின் துணை நிறுவனமான ஸ்டார்லிங்க் கருத்து, அதிவேக, உலகளாவிய இணைய அணுகலை வழங்கும் நோக்கத்துடன் 2015ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.