டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்ததால் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தில் திடீரென் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து “பயணிகள் விமானத்தில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனர்” என்று விமான நிலையம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளியில், விமான நிலையக் குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தீப்பிழம்புகள் விமானத்தை எரித்ததைக் காட்டியது.
விமான நிலையக் குழுவினர் பயணிகளை வெளியேற்ற முயன்றபோது, விமானத்தின் இறக்கையில் பயணிகள் நிற்பதை விமான நிலையத்தின் உள்ளே இருந்து வந்த மற்றொரு காணொளி காட்டியது.
விமானப் பயணத்தின் நடுவில் இயந்திர அதிர்வுகள் ஏற்பட்டதாக விமானக் குழுவினர் தெரிவித்ததை அடுத்து, விமானம் டென்வரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் வாயிலுக்குச் சென்றபோது, ஒரு இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததால் அவரச வழியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விமானப் பாதுகாப்பு குறித்த அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியது.