உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் 6 ஆவது ஆண்டு நிறைவிற்கு முன்னர் நீதி நிலைநாட்டப்படும் என்று கொழும்பு பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள பேராயர் இல்லத்தில் நேற்று (15) நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், அரசாங்கம் நீதியை உறுதி செய்யத் தவறினால், வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தார்.
இந்த நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்தனர்.
எனினும், அந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
அந்த நிலைமையை மாற்ற இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதை நாங்கள் ஆதரித்தோம், ஆனால் நிலைமை மாறாமல் இருந்தால், புதிய அரசாங்கத்திற்கான எங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.
அன்று கட்டுவாபிட்டி தேவாலயத்தில் ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு நாங்கள் இன்னும் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறோம்.
6 ஆவது ஆண்டு நிறைவுக்கு முன்னர் அரசாங்கத்திடமிருந்து நியாயமான மற்றும் உறுதியான பதில் கிடைத்தால், நாங்கள் அதைப் பாராட்டுவோம்.
இல்லையெனில், மீண்டும் வீதியில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை – என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.