இலங்கையில் Starlink இணைய சேவை அறிமுகம்

0
9
Article Top Ad

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRCSL) பணிப்பாளர் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இலங்கையில் கிடைக்கும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் Starlink இணைய சேவையை இலங்கைக்கு கொண்டுவரும் முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன.

என்றாலும், அதற்கான நகர்வுகளில் அரசாங்கம் முறையாக ஈடுபடாமையால் இத்திட்டம் தாமதமானது. இந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் Starlink இணைய சேவை தொட்பில் நடத்தி ஆய்வுகளின் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏப்ரல் மாதம் முதல் இந்த இணைய சேவையை மக்கள பெற முடியும் என கூறியுள்ள அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தேசிய பாதுகாப்பு மற்றும் சேவையை மேற்பார்வையிடுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமும் பயனர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் செயல்முறையை சீராக்க அரசாங்கம் தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சேவையைப் பெறுவது குறித்த ஆரம்ப விவாதங்களின் போது, ​​அரசாங்கம் தேசிய பாதுகாப்பு மற்றும் பயனர்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையைப் பயன்படுத்தி செயற்கைக்கோள் ஊடாக இணைய சேவையை வழங்கும் உலகின் முதல் நிறுவனமாக Starlink உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here