கருங்கடல் மற்றும் எரிசக்தி இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்த ரஷ்யா , உக்ரெய்ன் இணக்கம

0
10
Article Top Ad

கருங்கடல் மற்றும் எரிசக்தி இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்துவதற்காக உக்ரெய்ன் மற்றும் ரஷ்யாவுடன் அமெரிக்கா தனித்தனி ஒப்பந்தங்களை எட்டியது.

வொஷிங்டன் மாஸ்கோவிற்கு எதிரான சில தடைகளை நீக்குவதற்கு அழுத்தம் கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும் ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கருங்கடலில் கப்பல்கள் மீதான இராணுவத் தாக்குதல்களை நிறுத்தவும், எரிசக்தி உட்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை நிறுத்தவும் ரஷ்யாவும் உக்ரைனும் ஒப்புக்கொண்ட போதிலும் இந்த ஒப்பந்தங்கள் எப்போது அல்லது எவ்வாறு ஆரம்பமாகும் என்பது குறித்த தகவல்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, போரிடும் இரு தரப்பினதும் முதல் உறுதிமொழிகள் இந்த ஒப்பந்தங்கள் ஆகும்.

உக்ரெய்னில் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், கிவ் மற்றும் ஐரோப்பிய நாடுகளை கவலையடையச் செய்த மாஸ்கோவுடன் விரைவான நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

ரஷ்ய விவசாயம் மற்றும் உர ஏற்றுமதிகள் மீதான சர்வதேச தடைகளை நீக்குவதற்கு உதவுவதாக வொஷிங்டன் உறுதியளித்துள்ளது, இது ரஷ்யாவின் நீண்டகால கோரிக்கையாகும்.

இதனிடையே முழு ஒப்பந்தமும் உடனடியாக அமலுக்கு வரும் என உக்ரெய்ன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா ஒப்பந்தத்தை மீறுமாயின் மாஸ்கோ மீது கூடுதல் தடைகளை விதிக்கவும், உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்கவும் ட்ரம்பிடம் கோரிக்கை விடுப்பேன் என்றும் செலென்ஸ்கி கூறியுள்ளார்.

மறுபுறம் கருங்கடல் போர்நிறுத்தம் அதன் அரசுக்குச் சொந்தமான விவசாய வங்கியை இலக்குவைத்தமை உட்பட சில தடைகள் நீக்கப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும் என்றும், எரிசக்தி மீதான தாக்குதல்களின் இடைநிறுத்தம் கடந்த வாரம் முதல் நடைமுறையில் உள்ளது என்றும் மாஸ்கோ தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here