இங்கிலாந்தின் தடை இலங்கையில் நல்லிணக்கப் பயணத்துக்கு பாதிப்பு – வெளிவிவகார அமைச்சு

0
9
Article Top Ad

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான உள்ளூர் பொறிமுறைகளை வலுப்படுத்தும் செயல்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதனை பாதிக்கும் வகையில் நான்கு நபர்கள் மீதான தடை குறித்த இங்கிலாந்து அரசாங்கத்தின் அறிக்கை உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இலங்கை உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக இங்கிலாந்து தடைகள்” என்ற தலைப்பில் மார்ச் 24, 2025 அன்று இங்கிலாந்து வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையானது வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த அறிக்கையின் பிரகாரம் இங்கிலாந்து அரசாங்கம் நான்கு நபர்கள் மீது தடைகளை விதித்துள்ளது. அவர்களில் மூன்று பேர் இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தலைவர்கள்.

இவர்களது நபர்களின் சொத்துக்களை முடக்குவது மற்றும் அவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது உள்ளிட்ட இந்தத் தடைகள் இங்கிலாந்து அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்ச நடவடிக்கை என்பதை வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வலியுறுத்துகிறது.

நாடுகளால் எடுக்கப்படும் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் இலங்கையில் உள்நாட்டு நல்லிணக்க செயல்முறைக்கு எந்த ஆதரவையும் வழங்காது. மேலும் நிலைமையை மேலும் குழப்பமடையச் செய்வதே நோக்கமாகக் கொண்டுள்ளது.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான உள்ளூர் பொறிமுறைகளை வலுப்படுத்தும் செயல்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. கடந்த கால மனித உரிமை மீறல்கள் உள்ளூர் பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கிடம் இன்று (26) தெரிவித்துள்ளார் என்றும் குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here