வணிக நம்பிக்கையைக் குறைத்து, உலகளாவிய வளர்ச்சியைக் குறைக்கும் அச்சுறுத்தலுக்கு வழிவகுத்துள்ள கட்டண விதிப்புகளுக்கு மத்தியில், தரகு நிறுவனங்கள் தங்களின் முன்னறிவிப்புகளை மாற்ற முயன்றதால், உலக அளவில், அமெரிக்க பொருளாதாரம் 60 சதவீதம் மந்தநிலைக்கு செல்ல வாய்ப்புள்ளதாக சர்வதேச நிதி ஆய்வு நிறுவனமான ஜே.பி. மோர்கன் எச்சரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் பல்வேறு நாடுகளின் பொருள்களுக்கு புதிய கட்டணங்களை இந்த வாரத்தில் அறிவித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா அமெரிக்க பொருள்களுக்கு பதில் வரி விதித்துள்ளது. இது வர்த்தக போர் அச்சுறுத்தல் மற்றும் சர்வதேச நிதிச் சந்தையின் பேரழிவு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் ஜே.பி. மோர்கன் நிறுவனம் கூறுகையில், “உலக பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்படுவதற்கான வாய்ப்பு 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. முன்பு இது 40 சதவீதமாக இருந்தது.
இந்த ஆண்டு முழுவதும் உலகளாவிய கண்ணோட்டத்துக்கு அமெரிக்காவின் சீரழிவுக் கொள்கைகள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். நாட்டின் வர்த்தக கொள்கையின் வணிக நட்புறவு எதிர்பார்த்ததை விட குறைத்து விட்டது. இதன் விளைவாக அமெரிக்க வணிகச்சரிவு மற்றும் விநியோகச் சங்கிலி சீர்குலைவு அதிகரிக்கலாம்.” என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனம், அமெரிக்காவின் மந்த நிலைக்கான வாய்ப்பை மார்ச் மாதத்தில் இருந்த 25 சதவீதத்தில் இருந்து 30 முதல் 35 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோல், ஏப்ரல் 2 கட்டண அறிவிப்புக்கு முன்பு கோல்மேன் சாச்ஸும், அமெரிக்க பொருளாதார மந்தநிலைக்கான வாய்ப்பினை 20 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
அதேபோல் பார்க்லேஸ், பிஓஎஃப்ஏ குளோபல் ரிசர்ச், டாய்ச் வங்கி, ஆர்பிசி கேபிடல் மார்கெட்ஸ் மற்றும் யுபிஎஸ் குளோபல் வெல்த் மேனேஜ்மெண்ட் போன்ற பிற ஆராய்ச்சி நிறுவனங்களும், ட்ரம்பின் புதிய கட்டணம் நடைமுறையில் இருந்தால் அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலைக்கு தள்ளப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் என்று எச்சரித்துள்ளன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட போது வணிக நட்புக்கொள்கைகளின் எதிர்பார்ப்பு காரணமாக அமெரிக்க பங்குச்சந்தைகள் ஏற்றம் பெற்றன.
தொடர்ந்து இந்தாண்டு ஜனவரி மாதம் ட்ரம்பின் கட்டண விதிப்பு அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்க பங்குச்சந்தையின் முக்கிய பங்குகள் பெரிதும் சரிவைச் சந்தித்தன. பங்குச்சந்தைக் குறியீடு இந்த ஆண்டில் 500 புள்ளிகள் 8 சதவீதம் சரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.