இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போரில் இலங்கை, பங்களாதேஷ், வியட்னாம், மலேசியா, தாய்லாந்து உட்பட பல தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிக்குண்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பங்களாதேஷ் சீனாவுடன் காட்டிவரும் நெருக்கத்தால் அதன் பொருளாதாரத்தை கடுமையாக வீழ்ச்சிக்கு உட்படுத்தும் இந்தியா நகர்வுகளில் ஈடுபட்டுள்ளது.
சீனாவுடன் பங்களாதேஷ் மேற்கொண்ட சில ஒப்பந்தங்கள் காரணமாக அதிருப்தியுற்றுள்ள இந்தியா, இந்தியாவின் கடல் வழியாக பங்களாதேஷ் கப்பல்கள் செல்ல மட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்துடன், இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார பண்டங்கள் மற்றும் போக்குவரத்தை மேற்கொள்ளும் தரைவழி பாதையிலான போக்குவரத்தையும் துண்டித்துள்ளது.
இதனால் தமது பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுசெல்ல பாரிய செலவுகளை செய்ய வேண்டிய நிலைக்கு பங்களாதேஷ் தள்ளப்பட்டுள்ளது. சீனாவுடன் நெருங்க நெருக்க இவ்வாறான பல தடைகளை விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்த செய்திகள் அனைத்தும் இலங்கைக்கான எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீனப் பயணத்தில் சில உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அவற்றை நடைமுறைப்படுத்தினால் இந்தியாவின் எதிர்ப்பை சம்பாரிக்க நேரிடும் என இந்தியா எச்சரிக்கையை விடுத்துள்ளதாகவே இந்த நகர்கள் வெளிப்படுத்துவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரதமர் மோடியின் இலங்கை பயணத்திலும் சீனாவுடனான உடன்பாடுகளை இலங்கை நடைமுறைப்படுத்தினால் எதிர்கொள்ள வேண்டிய விளைவுகள் குறித்து மறைமுக எச்சரிக்கை மோடி விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக சீன ஆராய்ச்சி கப்பல்கள் இலங்கைக்கு வருகைதரும் அனுமதியை விரைவில் வழங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீன ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தப் பின்புலத்திலேயே இந்தியாவின் மறைமுக எச்சரிக்கைகள் இலங்கைக்கும் விடுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகி்ன்றனர்.