இலங்கையில் இரண்டு மாதகாலத்தில் 3000ற்கும் மேற்பட்ட கொவிட்-19 மரணங்கள்

0
283
Article Top Ad

 

இலங்கையில் கொவிட்-19 பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்றையதினம் 4000ஐக் கடந்தது. இதிலே  கடந்த இரண்டுமாத காலத்தில் மாத்திரம் 3000ற்கும் அதிகமான கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 43 மரணங்கள் நேற்று (22) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 3,959 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 43 மரணங்களுடன்இ இலங்கையில் இதுவரை 4,002 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மரணமடைந்த 43 பேரில் 26 பேர் ஆண்கள்இ 17 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது