தேர்தல் நடவடிக்கைகளுக்காக 65,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில்

0
15
Article Top Ad

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தேவைப்பட்டால் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

தற்போதைய அமைதி காலத்தில் தேர்தல் சட்டங்களை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் சுமார் 3,000 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்பாளர்களுக்கு மேலதிகமாக, 800 இற்கும் மேற்பட்ட நடமாடும் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here