சப்ரகமுவ பல்கலையின் மேலும் 6 மாணவர்களுக்கு விளக்கமறியல்

0
15
Article Top Ad

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட மேலும் ஆறு மாணவர்களை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், பகிடிவதையால் மனமுடைந்து அவர் இவ்வாறு செய்துகொண்டுள்ளதாக பெற்றோரும் நண்பர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு, ஏற்கனவே 4 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று 6 மாணவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 மாணவர்களுக்கு வகுப்புத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here