அமெரிக்காவைச் சேர்ந்த 69 வயதான Robert Prevost, புதிய பாப்பரசராக இன்று (08)தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் பாப்பரசர் லியோ XIV என அழைக்கப்படுவார்.
சிஸ்டைன் தேவாலய முன்றலில் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருக்க, இன்று மாலை வெள்ளைப் புகை வெளியேறி புதிய பாப்பரசர் தெரிவை உலகிற்கு அறிவித்தது. அதன் பின்னர், பாப்பரசரின் பெயரை வத்திக்கான் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.
சிஸ்டைன் தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தோன்றிய புதிய பாப்பரசர், தனது முதலாவது உரையை நிகழ்த்தினார். அதில் அனைவரையும் ஆசிர்வதிப்பதாகவும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
சிகாகோவில் பிறந்த பாப்பரசர் லியோ, தென் அமெரிக்க நாடான பெருவில் பல ஆண்டுகள் போதகராக பணியாற்றி அங்கு பேராயராக நியமிக்கப்பட்டார். ஒரு சீர்திருத்தவாதியான இவர், மறைந்த பாப்பரசர் பிரான்சிஸின் சீர்திருத்தங்களை கட்டியெழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.