இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகாப்டர் இன்று (09) காலை அவசரமாக தரையிறங்கும்போது மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியதில் ஐந்து இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஹெலிகாப்டர் மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியது, அதில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விமானப்படை ஹெலிகாப்டர் ஊழியர்கள் இருவரும், இராணுவ சிறப்புப் படை வீரர்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் பயிற்சி அமர்வின் போது புறப்பட்ட பெல் 212 ரக ஹெலிகாப்டர் மதுரு ஓயாவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் இருந்துள்ளனர். இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னரே 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் இலங்கை விமானப்படையின் பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து இலங்கை விமானப் படை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.