அரசியல்வாதிகள் பலருக்கு மகசின் சிறைச்சாலையே இனி முகவரி – சந்திரசேகரன்

0
373
Article Top Ad

அரசியல்வாதிகள் ஊழல், மோசடி மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வரும் நிலையில், எதிர்காலத்தில் மகசின் சிறைச்சாலையே அவர்களது தங்குமிடமாக மாறக்கூடும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சியில் இன்று (22) நடைபெற்ற ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசியல்வாதிகள், மக்களின் நிதியையே தங்களுக்காக பயன்படுத்தியதற்காக தற்போது ஒவ்வொருவரும் சிறை செல்லும் நிலைக்கு வந்து விட்டதாக குறிப்பிட்டார்.

சாதாரண மக்களுக்கு வழங்க வேண்டிய ஜனாதிபதி நிதியத்தையும் கடந்த காலங்களில் சிலர் தங்களுக்கே பயன்படுத்திக் கொண்டனர். தற்போதுதான் அதை மக்களுக்கு வழங்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது  என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.