தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணை மீது ஓகஸ்ட் 05ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம்

0
188
Article Top Ad

பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான பிரேரணையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.

2002 ஆம் ஆண்டு 5ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறைச்) சட்டத்தின் கீழ் 17 ஆம் உறுப்புரிமைக்கு அமைய, இந்த பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் இடம்பெறவுள்ளது.

2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க சட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரை அகற்றும் காரணங்களை விசாரிக்க மற்றும் அறிக்கையிட நியமிக்கப்பட்ட குழு, பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்க பரிந்துரை செய்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்றிற்கு அறிவித்துள்ளார்.

விசாரணையின் முடிவில், தேசபந்து தென்னகோன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சட்டத்தின் பிரிவு 8(2) இற்கு அமைய அவர் குற்றவாளி என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்ட நிலையிலேயே ஓகஸ்ட் 05ஆம் திகதி பிரேரணையை விவாதம் இடம்பெற உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.