செம்மணி புதைகுழியில் இதுவரை 101 என்புத்தொகுதிகள்!

0
192
Article Top Ad

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் இதுவரை மொத்தம் 101 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த புதைகுழி கடந்த பெப்ரவரி மாதம் மேம்பாட்டுப் பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் கீழ் பல கட்டங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அகழ்வாராய்ச்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையில் நடைபெறும் இப்பணிகள், ஓகஸ்ட் 4 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளின் பாடசாலைப் பை, பொம்மை, பால் போத்தல் மற்றும் ஆடைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. இது, சிறுவர்களும் இந்த புதைகுழியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செம்மணி புதைகுழியானது, மன்னார் சதொச கட்டிடத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்குப் பின்னர், வட மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியாகக் கருதப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன், எஞ்சிய பகுதிகளை ஸ்கேன் செய்யும் பணியும் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.