துருக்கியில் வரலாறு காணாத வெப்பம் – அச்சத்தில் மக்கள்

0
246
Article Top Ad

துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில், 50.5°C வெப்பநிலை பதிவாகி மக்களின் இயல்பு வாழ்வை மோசமாக பாதித்துள்ளது. சிலோபி என்ற நகரத்தில் இந்த வெப்பநிலை அளவு பதிவாகியுள்ளது. இது, நாடு முழுவதும் சூழலியல் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சகம் எச்சரித்துள்ளது.

132 வானிலை மையங்களில் வெப்பநிலை வரலாற்று அளவுகோலை கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகள் வெப்ப அலையில் சிக்கியுள்ளன. வெப்ப அனர்த்தங்கள் மற்றும் நீர் பற்றாக்குறை ஆகியவை மக்கள் வாழ்வில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

வடக்கில் உள்ள கராபுக் மாகாணத்தில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் நான்கு நாட்களாக போராடுகின்றனர். ஏற்கெனவே பல கிராமங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. எஸ்கிசெஹிர் பகுதியில் ஏற்பட்ட வேறு ஒரு தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீவிர வெப்பம் காரணமாக, கடலோர நகரமான செஸ்மே உள்ளிட்ட பல இடங்களில் குடிநீர் நுகர்வுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வெப்பஅலை இன்னும் பல நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மருத்துவ மற்றும் பேரிடர் முகாமைத்துவ அதிகாரிகள் முழு கவனத்துடன் செயற்படுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியாமல், மக்கள் நீர்நிலைகளுக்குச் சென்று தம்மை குளிர்வித்து வருகின்றனர்.