சொத்துகள் – பொறுப்புகள் பற்றி அறிவிக்காத அரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!

0
238
Article Top Ad

சொத்துகள் மற்றும் பொறுப்புகளைப் பற்றிய அறிவிப்புகளை அறிவிக்காத அரச அதிகாரிகள் மற்றும் அரச நிறுவன ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

2025 ஜூன் 30ஆம் திகதி வரை சமர்ப்பிக்க வேண்டிய சொத்துகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புகள் இன்னும் சமர்ப்பிக்கப்படாமல் உள்ள நிலைமை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஆணைக்குழு, இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2025 ஜூலை 1 முதல் ஓகஸ்ட் 31 வரையிலான காலப்பகுதியில் தாமதமாக சமர்ப்பிக்கப்படும் அறிவிப்புகளுக்கு சட்டப்படி அபராதம் விதிக்கப்படும் எனவும், இன்னும் சமர்ப்பிக்காதவர்கள் தங்கள் நிறுவனத் தலைவர்களிடம் உடனடியாக அறிவிப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

மேலும், ஜூன் 30 ஆம் திகதிக்குப் பிறகு சமர்ப்பிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் அறிவிப்புகளை  நிறுவனத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதோடு, அவர்கள் ஏற்க மறுத்தால், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநாட்டும் வகையில், அரச அதிகாரிகளின் சொத்துத் தகவல்கள் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.