நாட்டில் எந்தவிதமான சூழ்ச்சிகளையும் ஏற்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற முயல்வதற்கு இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடு வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (7) ஆற்றிய விசேட உரையில் அவர் கூறியதாவது, நாட்டில் அந்நிய முதலீடுகள் மற்றும் ஏற்றுமதிகள் அதிகரிப்பதால் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன என்று குறிப்பிட்டார்.
மேலும், அரசு நிறுவனங்களை இலாபமிக்க நிறுவனங்களாக மாற்றும் முயற்சிகள் நடைமுறையில் இருப்பதால், நாட்டின் நிதி நிலை பாதிக்கப்படாதவாறு கவனிக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.
பொருளாதார வளர்ச்சியை எதிர்நோக்கிய நிலையில் சிலர் குழப்ப நிலையை உருவாக்கும் தவறான கருத்துக்களை பரப்புவதாகவும், அரசாங்கம் இத்தகைய முயற்சிகளை மிக நெருக்கமாக கண்காணித்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், நாட்டில் ஜனநாயக முறையில் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள தடை விதிக்கப்படமாட்டாது என்றும், பொதுமக்களை சந்திப்பதும், கூட்டங்களை நடத்துவதிலும் எந்தவிதத் தடையும் இல்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

