நேபாளத்திற்கான அனைத்து விமான சேவைகளையும் இடைநிறுத்தியது இலங்கை

0
75
Article Top Ad

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை தொடர்ந்து, அந்நாட்டிற்கான அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமான இடைநிறுத்துவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

ஊழலுக்கு எதிராகவும் சமூக ஊடக தடைக்கு எதிராகவும் அந்நாட்டில் இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளதோடு, பாராளுமன்றம், நீதிமன்றம், அமைச்சின் அலுவலகங்கள், உத்தியோகபூர்வ இல்லங்கள் என அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதுமாத்திரமன்றி, ஆயுதங்களை கைப்பற்றியுள்ள இளைஞர்கள் அவற்றுடன் வீதியில் திரியும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், நிலைமை சுமூகமான நிலைக்கு வரும்வரை அந்நாட்டிற்கான விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுத்தியுள்ளது.

நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதைத் தொடர்ந்து, நேற்றிரவு முதல் நேபாளத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பினை, நாட்டின் இராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படையினர் ஏற்றுள்ளனர்.